

வான்கூவர்,
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வீழ்த்தியது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், காலை 8.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகள் விளையாடின.
வான்கூவர் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்போலோ முதல் கோலை பதிவு செய்து அணியை முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்து இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கின. இருப்பினும் அதனை கோலாக மாற்றமுடியவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என சுவிட்சர்லாந்து முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து துவங்கிய 2-வது பாதியின் துவக்கத்திலேயே சுவிட்சர்லாந்து வீரர் டான் ண்டோயே கோல் அடித்தார். இதன் மூலம் முன்னிலை 2 ஆக உயர்ந்தது.
அதன் பின்னர் முதல் கோலுக்காக அல்ஜீரியாவும் 3-வது கோலுக்காக சுவிட்சர்லாந்தும் கடுமையாக மல்லுக்கட்டின. இருப்பினும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடங்கள் முடிவில் சுவிட்சர்லாந்து 2-0 என முன்னிலையில் இருந்தநிலையில், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ஜீரியா தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியபோதும் கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு சுவிட்சர்லாந்து முன்னேறியது. சுவிட்சர்லாந்துக்கு எதிராக தோல்வியடைந்த அல்ஜீரியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.