உலகக் கோப்பை கால்பந்து: துனிசியா அணியின் பயிற்சியாளர் மாற்றம்

துனிசியா அணியின் பயிற்சியாளர் லாமோச்சி மாற்றப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து: துனிசியா அணியின் பயிற்சியாளர் மாற்றம்
Published on

மாண்டெரே,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியா அணி (எப் பிரிவு) தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் படுதோல்வி அடைந்தது. தோல்வி அடைந்த 2 நாளுக்குள் துனிசியா அணியின் பயிற்சியாளர் 54 வயது சப்ரி லாமோச்சி (பிரான்ஸ்) மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஹெர்வ் ரெனார்ட் (பிரான்ஸ்) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட் டுள்ளார். அவர் உடனடியாக பொறுப்பை ஏற்க இருக்கிறார். ரெனார்ட் உலகக் கோப்பையில் மொராக்கோ, சவுதி அரேபியா அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com