

கிரகோவ்,போலாந்து
21 வயதிற்குட்பட்டோருக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் போலாந்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மெனியும் மோதின. இப்போட்டியின் முழு நேர முடிவில் இரு அணியும் தலா 2 கோல்கள் அடித்திருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே வெற்றியை தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஜெர்மெனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியும் ஸ்பெனும் மோதின. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் எளிதாக வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஸ்பெயின் மற்றும் ஜெர்மெனி மோத உள்ள இறுதி போட்டி கிரகோவில் வருகிற வெள்ளி கிழமை நடைபெற உள்ளது.