பிரீமியர் லீக் - லிவர்பூலை சொந்த மைதானத்திலேயே சரித்த மான்செஸ்டர் சிட்டி

3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக்
Published on: 

லிவர்பூல்,

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி, லிவர்பூல் அணியை அதன் சொந்த மைதானமான ஆன்பீல்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சிவப்பு அட்டை

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவாகவில்லை. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ரையன் கிராவன்பெர்க் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் லிவர்பூல் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்தடுத்து கோல் அடித்த சிட்டி!

ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். தொடர்ந்து 68-வது நிமிடத்தில் ஜெரமி டோகு கோல் அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.

ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் ராயன் செர்கி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி, நடப்பு பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அந்த அணி 18 புள்ளிகளுடன் உள்ளது. லிவர்பூல் அணி இந்தத் தொடரில் முதல் தோல்வியை சந்தித்து 9-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com