உலகக் கோப்பை கால்பந்து - எத்தனை நடுவர்கள்?... எவ்வளவு சம்பளம்? - வெளியான ஆச்சரிய தகவல்

ஊதியம் தவிர, போட்டி கட்டணம், நாக்-அவுட் சுற்றில் இருந்து போனஸ் தொகையும் வழங்கப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து - எத்தனை நடுவர்கள்?... எவ்வளவு சம்பளம்? - வெளியான ஆச்சரிய தகவல்
Published on

வாஷிங்டன்,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எத்தனை நடுவர்கள், அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர்

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் இந்த தொடரில் வீரர்களுக்கு மட்டுமல்ல, நடுவர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

உலகக் கோப்பையில் எத்தனை நடுவர்கள்?

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 52 பிரதான நடுவர்கள், 88 உதவி நடுவர்கள் மற்றும் 30 வீடியோ உதவி நடுவர்கள் (VAR) பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பிரதான நடுவருடன், நான்கு உதவி நடுவர்கள் செயல்படுகின்றனர்.

பிரதான நடுவருக்கே அதிக வேலைப்பளு

களத்தில் 90 நிமிடங்களும் இடைவிடாமல் ஓடி, போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொறுப்பு பிரதான நடுவருக்கு உள்ளது. வீரர்களின் தவறுகளை கண்காணிப்பது, விதிமுறைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் அவர்களிடம் இருப்பதால், அவர்களுக்கான ஊதியமும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.94 லட்சம் வரை ஊதியம்

இந்த உலகக் கோப்பை தொடரில் பணியாற்றும் பிரதான நடுவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, போட்டி கட்டணம், நாக்-அவுட் சுற்றில் இருந்து போனஸ் தொகையும் வழங்கப்படுகிறது.

உதவி நடுவர்களுக்கு ரூ.24 லட்சம்

பிரதான நடுவர்களுடன் பணியாற்றும் உதவி நடுவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம் ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com