உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயினுக்கு கிடைக்கும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது.
உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயினுக்கு கிடைக்கும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Published on

வாஷிங்டன்,

23வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது.

இப்போட்டியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெரன் டொரஸ் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

பரிசுத்தொகை

இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் 4,814 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2வது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ( 33 மில்லியன் டாலர்கள்) இந்திய மதிப்பில் 3,177 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com