

பியூனஸ் அயர்ஸ்,
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தாய்நாட்டு அணிக்காக கடைசி போட்டியில் களம் காண உள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸிக்கு இந்தப் போட்டி பிரியாவிடை போட்டியாக அமைகிறது.
பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மாஸ் மானுமென்டல் மைதானத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இப்போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அக்டோபர் 7-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்த நட்புப் போட்டி இந்திய தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படாது. இந்திய ரசிகர்கள் ஜீ5 செயலியில் போட்டியை நேரலையாக காணலாம்.
2005-ம் ஆண்டு அர்ஜென்டினா அணியில் அறிமுகமான மெஸ்ஸி, ஒரு உலகக்கோப்பை, 2 கோபா அமெரிக்கா மற்றும் பைனலிசிமா பட்டங்களை வென்றுள்ளார்.
அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனைகளையும் அவர் வைத்துள்ளார். இதுவரை 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்துள்ளார்.