"ஹாலண்ட் கோல் அடித்தபோது ரொம்ப வலித்தது" - பிரீமியர் லீக் போட்டி பார்த்து கலங்கிய சாஹல்!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தீவிர ரசிகர் என்று சாஹல் கூறினார்.
யுஸ்வேந்திர சாஹல்
Published on: 

புதுடெல்லி,

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் தடுமாறி வரும் மான்செஸ்டர் யுனைடெட் அணி மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்று யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட்

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தீவிர ரசிகரான சாஹல், அண்மையில் ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற மான்செஸ்டர் டார்பி போட்டியை நேரில் கண்டுகளித்தார். அப்போது, தனது சிறுவயது முதல் அந்த அணியின் ரசிகராக இருப்பது குறித்தும், அணியின் தற்போதைய ஆட்டம் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிறுவயது முதலே யுனைடெட் ரசிகர்!

இதுகுறித்து சாஹல் கூறுகையில், “மான்செஸ்டர் யுனைடெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த அணி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிரீமியர் லீக் போட்டிகளைப் பார்ப்பேன். எனக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று, நண்பர்களுடன் சேர்ந்து யுனைடெட் அணியின் முக்கியமான போட்டிகளைப் பார்ப்பது. அப்போது உணர்ச்சிகளும் கேலி, கிண்டல்களும் நிறைந்திருக்கும்” என்றார்.

மான்செஸ்டர் டார்பி தோல்வி வேதனை!

சமீபத்தில் நடைபெற்ற மான்செஸ்டர் டார்பி போட்டி குறித்துப் பேசிய அவர், “மான்செஸ்டர் சிட்டி அணி 10 வீரர்களுடன் விளையாடியபோது, யுனைடெட் அணி நிச்சயம் வெற்றியடையும் என்று நினைத்தேன். ஆனால், எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்ததும், காணொளி உதவி நடுவர் (VAR) ஆய்வின்போது நடந்த சம்பவங்களும் யுனைடெட் ரசிகராக எனக்கு மிகுந்த வேதனையை அளித்தன. இதுதான் கால்பந்து. சில நேரங்களில் நாம் விரும்பிய முடிவு கிடைக்கும்; சில நேரங்களில் கிடைக்காது” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், 10 வீரர்களுடன் விளையாடிய மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எர்லிங் ஹாலண்ட் 60-வது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார்.

ஆதரவளிப்பேன்

மேலும், ‘மான்செஸ்டர் யுனைடெட் அணி மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். சிறுவயது முதலே யுனைடெட் ரசிகராக இருப்பதால், தொடர்ந்து அந்த அணிக்கு ஆதரவளிப்பேன்” என்று சாஹல் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com