உலகக் கோப்பை - "நான் கோல் அடிக்கலனாலும் பரவாயில்ல, ஆனா..." - ரசிகர்களை சிலிர்க்க வைத்த எம்பாப்பேவின் பேட்டி

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள எம்பாப்பே, 12 கோல்களை அடித்துள்ளார்.
உலகக் கோப்பை - "நான் கோல் அடிக்கலனாலும் பரவாயில்ல, ஆனா..." - ரசிகர்களை சிலிர்க்க வைத்த எம்பாப்பேவின் பேட்டி
Published on

பிரான்ஸ்,

எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி, பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பையை வெல்வதே தனது ஒரே இலக்கு என்றும், தனிப்பட்ட சாதனைகள் அதற்கு அடுத்தபடிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அணி வென்றால் அதுவே பெரிய சாதனை

"ஒரு கோல் கூட அடிக்காமல் பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

"நிச்சயமாக. இப்போதே அதற்கு நான் சம்மதிப்பேன். பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றால், பாரிஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் தெருக்களில் முதல் ஆளாகக் கொண்டாடுவது நானாகத்தான் இருப்பேன். மீண்டும் உலகக் கோப்பையுடன் பிரான்சுக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார்.

உலகக் கோப்பையின் அழுத்தம் குறித்து பேசிய எம்பாப்பே,

"உலகக் கோப்பை என்பது இரண்டு ஆட்டங்கள் கொண்ட தொடர் அல்ல. ஒரு மோசமான ஆட்டம் கூட உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடும். அதனால் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நாம் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்பதை அணி வீரர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வருகிறேன்" என்று கூறினார்.

சாதனை பட்டியலில் எம்பாப்பே

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள எம்பாப்பே, 12 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

கோப்பையை நோக்கி பிரான்ஸ்

நட்சத்திர வீரர்களால் நிரம்பியுள்ள பிரான்ஸ் அணி, இந்த முறை மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. பிரான்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் 17-ம் தேதி செனகல் அணியை எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com