சென்னையில் நடந்த இந்தியா-நேபாளம் பெண்கள் கால்பந்து போட்டி 'டிரா'

சென்னையில் நடந்த இந்தியா-நேபாள பெண்கள் அணிகளின் கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
சென்னையில் நடந்த இந்தியா-நேபாளம் பெண்கள் கால்பந்து போட்டி 'டிரா'
Published on

சென்னை,

இந்தியா-நேபாளம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., விளையாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் ஜேசையா வில்லவராயர், துணைத்தலைவர் சுரேஷ் மனோகரன், இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே உள்பட பலர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. கடந்த புதன்கிழமை இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com