இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!... முதல் நாளில் 2 போட்டிகள்

இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.எஸ்.எல்
Published on: 

பெங்களூரு,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 13-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

13 அணிகள் பங்கேற்பு

இந்த தொடரில் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி., சர்ச்சில் பிரதர்ஸ், ஈஸ்ட் பெங்கால், இன்டர் காசி, எப்.சி. கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி என மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த சீசனில் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் மோதும் முழுமையான லீக் சுற்று நடைபெற உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி மோதல்

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

சென்னையின் எப்.சி. - கோவா இன்று பலப்பரீட்சை

கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவா அணியுடன் மோதுகிறது.

நேரடி ஒளிபரப்பு

இன்றைய போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், யூடியூப் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com