இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட்

பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது.
Image Courtesy: @FIFAcom
Image Courtesy: @FIFAcom
Published on

கத்தார்,

பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். தொடர்ந்து முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84-வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோலும் அடித்து அசத்தினர். இதனால் ரியல் மாட்ரிட் 3-0 என முன்னிலை பெற்றது.

பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், ஆட்ட நேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com