

கொல்கத்தா,
உலக தரவரிசையில் 138-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2 முறை உலக சாம்பியனும், தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் உருகுவே அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.
பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே அணி கோல் மழை பொழிந்தது. டார்வின் நுனெஸ் (11-வது நிமிடம்). மேக்சிமிலியானோ அராவ்ஜோ (28 மற் றும் 59-வது நிமிடம்). ரோட்ரிகோ ஜலசார் (53-வது நிமிடம்), ஜூவான் மானு வல் சனப்ரியா (71-வது நிமிடம்), ரோட்ரிகோ அகுரே (86-வது நிமிடம்) ஆகி யோர் உருகுவே அணியில் கோலடித்தனர். இந்திய தரப்பில் 22-வது நிமிடத் தில் அனிருத் தபா கோல் திருப்பினார். முடிவில் உருகுவே 6-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை பந்தாடியது.
முன்னதாக 26-வது நிமிடத்தில் திடீரென ஸ்டேடியத்தின் சுற்றுப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் களத்தில் இருந்து வெளியேறி தங்களது ஓய்வறைக்கு சென்றனர். அப்போது மழை பெய்யாவிட்டாலும் ரசிகர்களும் மைதானத்தில் பாதுகாப்பான மேற்கூரை உள்ள இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 30 நிமிட பாதிப்புக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது.