ப்ரீமியர் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி வெற்றி!

லிவர்பூல் அணி தொடர்ந்து 6வது முறையாக அர்செணல் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
ப்ரீமியர் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி வெற்றி!
Published on

லிவர்பூல்,

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் லிவர்பூல்-அர்செணல் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. அர்செணல் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 4-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம், தொடர்ந்து 6வது முறையாக அர்செணல் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது லிவர்பூல் அணி. லிவர்பூல் அணி 12 போட்டிகளில் விளையாடி 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது

செல்சியா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக அர்செணல் அணி 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com