விடைபெறுகிறாரா ரொனால்டோ? - சகோதரி சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்த தகவல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Published on

போர்ச்சுக்கல்,

கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார்.

ஓய்வு?

41 வயதாகும் ரொனால்டோ கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது அவர் 2026 பிபா உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும்நிலையில், இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பை என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார்.

பேட்டியில் உடைத்த ரகசியம்

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் விரைவில் நிறைவடைய உள்ளது என்று கூறிய காட்டியா அவிரோ, அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் முழுமையாக ரசித்து கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

இதுவரை கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் சார்பில் அவரது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், அவரது சகோதரியின் இந்த தகவல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com