ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..!

ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..!
Published on

கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியில் டேவிட் வில்லியம்ஸ் (1 வது நிமிடம்), ஆஷிஸ் ராய் (64 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் ஐதராபாத் எப்.சி அணியில் பர்த்தொலோமேய் (18 வது நிமிடம்), ஜேவியர் சிவெரியோ (90+1 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com