ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு எப்.சி அணி வெற்றி

நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு எப்.சி அணி வெற்றி
Published on

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணி சார்பில் நாரோம் ரோசன் சிங் ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிசெய்தார்.

மேலும் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் ஐதராபாத் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com