ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா
Published on

கொல்கத்தா,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் ஆஷிக் குருனியன் ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலும், சுரேஷ் சிங் 39-வது நிமிடத்திலும், ரியான் வில்லியம்ஸ் 71-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் அன்வர் அலி ஆட்டத்தின் 21-வது நிமிடத்திலும், சவுல் கிரெஸ்போ 55-வது நிமிடத்திலும், ஆன்டன் சோஜ்பெர்க் 90+7வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்தன. இதையடுத்து பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com