

சென்னை,
13-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி.யை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை அணியில் இம்மானுவேல் இமானிஷிம்வே 11-வது நிமிடத்திலும், பிரிசன் பெர்னாண்டஸ் 29-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் (மாலை 5 மணி), ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் ஜெயன்ட் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.