

சென்னை,
13 அணிகள் இடையிலான 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது.
இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து ஆதிக்கம் செலுத்தியதுடன், இலக்கை நோக்கி 5 முறை ஷாட் அடித்தா லும் கடைசி வரை எதிரணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. காயம் உள்ளிட்ட விரயங்களுக்காக வழங்கப் படும் கூடுதல் நேரத்தில் (இஞ்சுரி டைம்) முரட்டு ஆட்டம் காரணமாக சென்னை அணி வீரர் இம்மானுவேல், கேரளா அணி வீரர் ஆந்த்ரே கிரீன் ஆகியோர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
முடிவில் இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் ஒரு வெற்றி, 2 டிரா. ஒரு தோல்வி கண்டிருக்கிறது.