ஐ.எஸ்.எல்.கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
image courtesy:twitter/@IndSuperLeague
image courtesy:twitter/@IndSuperLeague
Published on

புதுடெல்லி,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் இன்று புதுடெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

பிற்பாதி ஆட்டத்திலும் மற்றொரு கோல் அடித்த ஜாம்ஷெட்பூர் முன்னிலையை வலுப்படுத்தியது. பதில் கோல் அடிக்க பஞ்சாப் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி நேரத்தில் பலன் கிட்டியது. இருப்பினும் அந்த அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

முடிவில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளி பட்டியலிலும் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com