ஐ.எஸ்.எல். கால்பந்து; ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 5 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி 2வது இடத்திலும், நார்த்ஈஸ்ட் யுனைடெட் 10வது இடத்திலும், முகமதின் எஸ்.சி அணி 11வது இடத்திலும், ஐதராபாத் அணி 12வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com