ஐ.எஸ்.எல்.கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டி நடந்து வருகிறது.
ஐ.எஸ்.எல்.கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி
Published on: 

கவுகாத்தி,

13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 13 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டி நடந்து வருகிறது.

இதில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்டை தோற்கடித்தது. கடைசி நிமிடத்தில் ஜிதின் கோலடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com