ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி
Published on

ஐதராபாத்,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி சார்பில் விபி சுஹைர் ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலும், லால்ரின்பெலா 13-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். டெல்லி அணி சார்பில் மதிஜா ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று மாலை 5 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா - மோகன் பகான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகளும் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com