

சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்த போட்டி தொடரில் புவனேஸ்வரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - முகமதின் எஸ்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி சார்பில் வி.பி. சுஹைர் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முகமதின் எஸ்.சி. அணி சார்பில் அடிசன் சிங் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். இந்த நிலையில் ஒடிசா எப்.சி. - முகமதின் எஸ்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.