ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் இடையேயான ஆட்டம் டிரா

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
image courtesy; twitter/@IndSuperLeague
image courtesy; twitter/@IndSuperLeague
Published on

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இதனிடையே கலிங்கா கோப்பை உள்ளிட்ட சில கால்பந்து தொடர்கள் நடைபெற்றதால் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் நேற்று வரை ஐ.எஸ்.எல்.தொடரின் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐ.எஸ்.எல் தொடரின் ஆட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளன.

இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஜாம்ஷெட்பூர் அணி தரப்பில் இம்ரான் கான் ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் தரப்பில் முகமது அலி ஒரு கோல் அடித்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com