ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

இந்த தொடரில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன.
image courtesy; twitter/@IndSuperLeague
image courtesy; twitter/@IndSuperLeague
Published on

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் -நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இதில் மோகன் பகான் 4-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மோகன் பகான் அணி தரப்பில் லிஸ்டன் கோலகோ, ஜேசன் கம்மிங்ஸ், டிமிட்ரி பேட்ரடோஸ் மற்றும் சஹால் அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தரப்பில் டாமி ஜூரிக் மட்டுமே 2 கோல் அடித்தார்.

இதில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com