ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: @mohunbagansg
Image Courtesy: @mohunbagansg
Published on

கவுகாத்தி,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் மோகன் பகான் அணி இதுவரை 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 10 ஆட்டங்களில் ஆடியுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 4 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com