ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - பெங்களூர் எப்.சி அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @IndSuperLeague
Image Courtesy: @IndSuperLeague
Published on

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - பெங்களூர் எப்.சி அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் 5வது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் 8வது இடத்திலும், பெங்களூர் எப்.சி 9வது இடத்திலும், பஞ்சாப் எப்.சி 11வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com