

புதுடெல்லி,
ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணி வெற்றி பெற்றது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், எஸ்சி டெல்லி மற்றும் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் எஸ்சி டெல்லி அணியின் லால்ரின்லியானா ஹனம்டே கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் டெல்லி அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து இரண்டாம் பாதியில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் லீ எர்வின் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
அதனைத் தொடர்ந்து 60-வது நிமிடத்தில் மிகுவல் பிகுவேரா கோல் அடித்தார். இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்த எஸ்சி டெல்லி அணியால், இரண்டாம் பாதியில் மோகன் பகான் அணியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி வெற்றி பெற்து.