உலகக் கோப்பையில் அதிக கோல்: தனது சாதனையை முறியடித்த மெஸ்சிக்கு குளோசே பாராட்டு

அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.
உலகக் கோப்பையில் அதிக கோல்: தனது சாதனையை முறியடித்த மெஸ்சிக்கு குளோசே பாராட்டு
Published on

புது டெல்லி,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து தனது சாதனையை முறியடித்த மெஸ்சிக்கு குளோசே பாராட்டு தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா வெற்றி

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிராக நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மெஸ்சி சாதனை

இப்போட்டியின் முதல் பாதியிலேயே மெஸ்சி ஒரு கோல் அடித்து, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மிராஸ்லாவ் குளோசேவின் (16 கோல்) சாதனையை முறியடித்து புதிய அத்தியாயம் படைத்தார். பின்னர் மேலும் ஒரு கோல் அடித்து தனது உலகக்கோப்பை கோல் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தினார்.

குளோசே வாழ்த்து

இந்நிலையில், தனது சாதனையை முறியடித்த மெஸ்சிக்கு, குளோசே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"மெஸ்சி ஒரு சாதாரண வீரர் அல்ல என்று நான் எப்போதும் சொல்லுவேன். என்னை பொறுத்தவரை, கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் மெஸ்சி தான். வாழ்த்துகள் சாம்பியன்!" என்று பாராட்டினார்.

அபார பார்மில் மெஸ்சி

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலேயே மெஸ்சி 5 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அல்ஜீரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்த அவர், தற்போது ஆஸ்திரியாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com