உலகக் கோப்பை கால்பந்தில் வரலாற்று தருணம்... 1000-வது போட்டியில் ஜப்பான் - துனிசியா மோதல்

1000-வது போட்டியை எட்டுவதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடர் புதிய மைல்கல்லை தொட உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்தில் வரலாற்று தருணம்... 1000-வது போட்டியில் ஜப்பான் - துனிசியா மோதல்
Published on

மாண்டெரே,

உலகக் கால்பந்து வரலாற்றில் 1000-வது போட்டியில் ஜப்பான் மற்றும் துனிசியா அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கோப்பை

1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தொடரில் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. தற்போது நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் களமிறங்கியுள்ளன. இதற்கு முன் உலகக் கோப்பையின் 100-வது போட்டி 1954-ம் ஆண்டு தொடரிலும், 500-வது போட்டி 1994-ம் ஆண்டு தொடரிலும் நடைபெற்றது. தற்போது இந்த உலகக் கோப்பை தொடர் 1000-வது போட்டியை எட்டுவதன் மூலம் புதிய மைல்கல்லை தொட உள்ளது.

வரலாற்றை எழுதும் மோதல்

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முக்கியமான இடத்தை பெறும் இந்த 1000-வது போட்டியில் ஜப்பான் மற்றும் துனிசியா அணிகள் இன்று களமிறங்குகின்றன. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com