கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஈஸ்ட் பெங்கால்

இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Image Courtesy: @eastbengal_fc
Image Courtesy: @eastbengal_fc
Published on

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்று இருந்தன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் தங்களது பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அதன்படி ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com