கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; பெங்களூரு-இண்டர் காசி அணிகள் மோதிய ஆட்டம் டிரா

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @bengalurufc
Image Courtesy: @bengalurufc
Published on

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் டி பிரிவு ஆட்டம் ஒன்றில் பெங்களூரு கால்பந்து கிளப் - இண்டர் காசி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இண்டர் காசி அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் பெங்களூரு அணியும் ஒரு கோல் அடித்தது. இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com