

நியூஜெர்சி,
2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து 'கோல்டன் பூட்' விருதை பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே வென்றுள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற 2022 பிபா உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே, அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் உட்பட மொத்தம் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.
அதேபோல், தற்போது 2026 உலகக் கோப்பை தொடரிலும் அபாரமான கோல் வேட்டையை தொடர்ந்த எம்பாப்பே, 8 போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்து மீண்டும் அதிக கோல்கள் அடித்த வீரராக கோல்டன் பூட் விருதை கைப்பற்றி சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் கோல்டன் பூட் விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.