உலகக் கோப்பையில் அதிக கோல் - ’ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை... அவர்தான் அடிப்பார்’- எம்பாப்பே கணிப்பு

ரொனால்டோ, மெஸ்ஸியையை விட அதிக கோல் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக கோல் -  ’ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை... அவர்தான் அடிப்பார்’- எம்பாப்பே கணிப்பு
Published on

பாரிஸ்,

இந்தாண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரர்கள் குறித்து பிரான்ஸ் அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ரொனால்டோ மெஸ்ஸியையை விட அதிக கோல் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரொனால்டோவை விட தானே இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடிப்பேன் என்று கூறியுள்ளார்.

2022 இறுதிப்போட்டியின் வலி இன்னும் மறையவில்லை

எம்பாப்பேவுக்கு இந்த உலகக் கோப்பை ஒரு சாதாரண தொடர் அல்ல. 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோல் அடித்த போதிலும், பிரான்ஸ் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. அந்த ஏமாற்றத்திற்கு பதிலடி கொடுத்து, உலகக் கோப்பையை மீண்டும் வெல்லும் இலக்குடன் அவர் களமிறங்க உள்ளார்.

ரொனால்டோ - மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா?

இந்த தொடரில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் தங்களது 6-வது உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.

இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் ரொனால்டோ 8 கோல்களும், மெஸ்ஸி 13 கோல்களும் அடித்துள்ளனர். ஆனால் ரொனால்டோவின் உலகக் கோப்பை வாழ்க்கையில் இன்னும் ஒரு குறை நீடிக்கிறது. அவர் இதுவரை நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளில் ஒரு கோல் கூட அடித்ததில்லை. அந்த பதிவை மாற்றுவதே இந்த உலகக் கோப்பையில் ரொனால்டோவின் முக்கிய இலக்காக இருக்கும்.

குளோசே சாதனையை நோக்கும் எம்பாப்பே

ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள எம்பாப்பே, 12 கோல்களை அடித்துள்ளார். அதில் இறுதிப்போட்டிகளில் மட்டும் 4 கோல்கள் அடங்கும். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது மிரோஸ்லாவ் க்ளோஸ் 16 கோல்களுடன் வைத்துள்ளார். 12 கோல்களுடன் இருக்கும் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் மேலும் 5 கோல்கள் அடித்தால் அந்த சாதனையை முறியடிக்க முடியும்.

பிரான்ஸுக்கு சாதகமான குரூப்

பிரான்ஸ் அணி குரூப் I-ல் செனகல், ஈராக் மற்றும் நார்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் முதல் போட்டி வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. உலகக் கோப்பை பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் கனவுடன் களமிறங்கும் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக எம்பாப்பே பார்க்கப்படுகிறார்.

கோல் வேட்டையில் யார் முன்னிலை?

ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே என நட்சத்திரங்கள் ஒரே உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளதால், இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் யார் அதிக கோல்கள் அடித்து வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதைக் காண உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com