ஸ்பெயின் இளவரசியால் கவுரவிக்கப்பட்ட மெஸ்ஸி - பெருமை சேர்த்த 'பிரின்சஸ் ஆப் அஸ்டூரியாஸ்' விருது

சமீபத்தில் சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றார்.
மெஸ்ஸி
Published on: 

ஓவியடோ,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு, ஸ்பெயினின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பிரின்சஸ் ஆப் அஸ்டூரியாஸ்’ விளையாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் இளவரசி லியோனார் கையால் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

50 ஆயிரம் யூரோ

1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரின்சஸ் ஆப் அஸ்டூரியாஸ் விருதுகள், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதுடனும் சான்றிதழ், பதக்கம், ஜோன் மிரோ வடிவமைத்த சிற்பம் மற்றும் 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு டென்னிஸ் நட்சத்திரங்களான ரபேல் நடால் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.

பாலன் டி'ஓர்

39 வயதான மெஸ்ஸி, கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். எட்டு முறை பாலன் டி'ஓர் விருதை வென்றுள்ள அவர், 2022-ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியுடன் உலகக்கோப்பையையும் கைப்பற்றினார்.

சமீபத்தில் சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com