மேஜர் லீக் கால்பந்து: எல்.ஏ. கேலக்ஸி அணியை வீழ்த்திய இண்டர் மியாமி

மெஸ்ஸி அபாரமாக ஒரு கோல் அடித்ததோடு, தனது அணி வீரர் மேலும் ஒரு கோல் போட அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
Image : Inter Miami CF
Image : Inter Miami CF
Published on

லாஸ் ஏஞ்சலஸ்,

அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர்மியாமி அணியும், எல்.ஏ.கேலக்ஸி அணியும் மோதின.

இப்போட்டியில் இண்டர் மியாமி அணி தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக ஆட்ட நேர முடிவில் இண்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் எல்.ஏ. கேலக்ஸி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மெஸ்ஸி அபாரமாக ஒரு கோல் அடித்ததோடு, தனது அணி வீரர் மேலும் ஒரு கோல் போட அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்த தொடரில், மெஸ்ஸி 19வது கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com