மேஜர் லீக் கால்பந்து தொடர்; இண்டர் மியாமி அணி வெற்றி ...!!

லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி இண்டர் மியாமி அணி வெற்றி பெற்றுள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

நியூஜெர்சி,

மேஜர் லீக் கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ஒரு ஆட்டத்தில் மெஸ்சியின் இண்டர் மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இண்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இண்டர் மியாமி அணி தரப்பில் பகுண்டோ பரியாஸ், ஜோர்டி ஆல்பா மற்றும் லியோனார்டோ காம்பனா ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக ரியான் ஹோலிங்ஸ்ஹெட் ஒரு கோல் அடித்தார். மெஸ்சி இந்த ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை என்றாலும் ஜோர்டி ஆல்பா மற்றும் லியோனார்டோ காம்பனா கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com