மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அதிரடி மாற்றம்

தொடர் தோல்விகள் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அணி நிர்வாகம் அதிரடியாக மாற்றியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அதிரடி மாற்றம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நார்வே முன்னாள் வீரர் ஓலே குனர் சோல்க்ஜார் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த சீசனுக்கான பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் யுனைடெட் அணி கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்தது.

இதனால் அதிருப்திக்குள்ளான அணி நிர்வாகம் சோல்க்ஜாரை பதவியில் இருந்து நேற்று தடாலடியாக நீக்கியது. அவரது பயிற்சி குழுவில் இருந்த மைக்கேல் காரிக் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com