இத்தாலி பயிற்சியாளராக மான்சினி நியமிக்கப்பட்டது ஏன் ? கால்பந்து சம்மேளனம் விளக்கம்

முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி திடீரென விலகினார்.


இத்தாலி பயிற்சியாளராக மான்சினி நியமிக்கப்பட்டது ஏன் ?  கால்பந்து சம்மேளனம் விளக்கம்
Published on

ரோம்,

உலகக் கோப்பை கால்பந்தில் 4 முறை பட்டம் வென்ற அணியான இத்தாலி, தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பையை குறி வைத்து இத்தாலியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராபர்ட்டோ மன்சினி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி 2023-ம் ஆண்டு திடீரென விலகினார். தற்போது 3 ஆண்டுக்கு பிறகு அவரை இத்தாலி கால்பந்து சம்மேளனம் இழுத்துள்ளது.

இத்தாலி பயிற்சியாளராக மான்சினி நியமிக்கப்பட்து தொடர்பாக இத்தாலிகால்பந்து கூட்டமைப்பு (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பல காரணங்களை கருத்தில் கொண்டு, ராபர்டோ மான்சினி சரியான நபர் என்று நான் உணர்ந்தேன்.இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு உறுதியானதும் தெளிவானதுமாக இருந்தது. அதேபோல் மால்டினியின் கருத்தும் தெளிவாக இருந்தது. என தெரிவித்துள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com