பிரான்சுக்காக அதிக கோல்: எம்பாப்பே சாதனை

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரான்சுக்காக அதிக கோல்: எம்பாப்பே சாதனை
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் தொடக்க ஆட்டத்தில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே செனகலுக்கு எதிராக அடித்த இரட்டை கோலுடன் சர்வதேச கால்பந்து போட்டியில் அவரது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 58-ஐ (99 ஆட்டம்) எட்டியது. இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஒலிவியர் ஜிருட் 57 கோல்களுடன் (137 ஆட்டம்) முதலிடத்தில் இருந்தார். அவரை எம்பாப்பே பின்னுக்கு தள்ளினார்.

இது தொடர்பாக எம்பாப்பே கூறுகையில், 'எனது நாட்டிற்காக இன்னும் ஒரு சாதனையை படைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் எப்போதும் செய்ய விரும்பினேன். ஆனால் நாங்கள் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்பது தெரியும். எனது நாட்டிற்காக வரலாறு படைக்கவும், பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு சென்று உலகக் கோப்பையை வெல்வதை உறுதி செய்யவும் விளையாடுகிறேன். என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com