நேஷன்ஸ் லீக் கால்பந்து - இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம் 'டிரா'

லண்டனில் இன்று நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on: 

லண்டன் ,

லண்டனில் இன்று நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின.தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடின.முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர்.ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் (பெனால்டி) உதவியுடன் ஜெர்மனி அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்தார்.தொடர்ந்து அந்த அணியின் கை ஹவர்ட்ஸ் 67வது நிமிடத்த்தில் கோல் அடித்தார்.இதனால் ஜெர்மனி அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணியின் லுக்கே ஷா 71வது நிமிடம் ,மசோன் மவுண்ட் 75வது நிமிடம்,ஹர்ரி கேன் 83வது நிமிடம் (பெனால்டி) கோல் அடித்தனர்.இதனால் 3-2 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது..வெற்றி வாய்ப்பும் இங்கிலாந்து அணிக்கு இருந்தது.ஆனால் ஆட்டத்தின் பரபரப்பான 87வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் கை ஹவர்ட்ஸ் அசத்தலான கோல் அடித்தார்.இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் இருந்தன.இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com