

லிமா,
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். இதன் தாக்கம் தென் அமெரிக்க நாடான பெருவில் (Peru) ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்டின் பெயரை ஆசையாக சூட்டி வருகின்றனர்.
உலகக் கோப்பை தொடரில் ஹாலண்டின் சிறப்பான ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட பெரு நாட்டு பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு அவரது பெயரை ஆர்வத்துடன் சூட்டி வருகின்றனர். சமீபத்தில் பிறந்த 468 குழந்தைகளுக்கு 'ஹாலண்ட்' என்றும், 91 குழந்தைகளுக்கு 'எர்லிங் ஹாலண்ட்' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் ஹாலண்ட் வெறும் 4 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அவரது அபார ஆட்டத்தின் உதவியுடன் நார்வே அணி, பிரேசிலை வீழ்த்தி உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்கு பிறகு பெருவில் ஹாலண்ட் பெயரை குழந்தைகளுக்கு சூட்டும் பழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெருவில் கால்பந்து வீரர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவது புதிதல்ல. பல நட்சத்திர வீரர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டி வருகின்றனர். அந்த பட்டியலில் பிரேசில் ஜாம்பவான் நெய்மார் முதலிடத்தில் உள்ளார்
நெய்மார் - 33,809
மெஸ்ஸி - 3,402
யமால் - 1,241
ரொனால்டோ - 1,185