ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில் நெய்மாருக்கு இடமில்லை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான பிரேசில் அணியின் கேப்டனாக பின்கள வீரர் 38 வயது டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில் நெய்மாருக்கு இடமில்லை
Published on

முழங்கால் காயத்தால் கோபா அமெரிக்கா போட்டியில் விளையாடாத அவருக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. இதேபோல் 31 வயதான கோல்கீப்பர் சான்டோஸ், 28 வயது பின்கள வீரர் டியாகோ கார்லோஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர வீரரான 29 வயதான நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து அணியில் 3 வீரர்களை தவிர எஞ்சிய அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனால் நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com