

சென்னை,
இந்த ஆண்டு பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் கனடாவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை நோரா பதேஹி (Nora Fatehi) பங்கேற்க உள்ளார். 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கிய நோரா, தற்போது மீண்டும் கலந்துகொள்ள உள்ளார்.
கனடாவின் டொராண்டோவில் உள்ள பிஎம்ஓ பீல்ட் மைதானத்தில் ஜூன் 12 -ம் தேதி நடைபெறவுள்ள பிரமாண்டமான தொடக்க விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் நோரா பதேஹி, அலாநிஸ் மோரிசெட் , மைக்கேல் பப்லே , அலெசியா காரா, ஜெஸ்ஸி ரெய்ஸ் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற கலைஞர்களுடன் இணைந்து மேடையை அலங்கரிக்கிறார்.
2026 பிபா உலகக்கோப்பை போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெற உள்ளன.