

ஆர்லிங்டன்
ஐவரிகோஸ்ட்டுக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நார்வே அணி முன்னிலை பெற்றுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்தும் 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில், இரவு 10.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஐவரிகோஸ்ட் மற்றும் நார்வே அணிகள் விளையாடின. அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 39-வது நிமிடத்தில் நார்வே அணி வீரர் ஆன்டனியோ நூசா முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. இதனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நார்வே அணி முன்னிலையில் உள்ளது.