தாயகம் திரும்பிய நார்வே அணியினர்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

காலிறுதி போட்டியில் நார்வே அணி இங்கிலாந்திடம் 1-2 என தோல்வியடைந்தது.
தாயகம் திரும்பிய நார்வே அணியினர்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Published on

மியாமி,

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் காலிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில், காலிறுதி போட்டியில் நார்வே அணி இங்கிலாந்திடம் 1-2 என தோல்வியடைந்தது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய நார்வே அணி, 2026 தொடரில் ரசிகர்களின் மனதை கவரும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரூப் சுற்றை வெற்றிகரமாக கடந்த நார்வே, 16-வது சுற்றில் பலம் வாய்ந்த பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

காலிறுதியில் தோல்வியடைந்தாலும் நார்வே அணியின் ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நார்வே வீர்ரகள் தாயகம் திரும்பிய போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நார்வே அணி வீரர்களின் செயல்பாட்டை அவர்கள் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com