மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி அளித்த நாட்டிங்ஹாம்... 3-1 என வீழ்த்தி அசத்தல்

முதல் பாதி முடிவில் பாரஸ்ட் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
நாட்டிங்ஹாம் பாரஸ்ட்
Published on: 

நாட்டிங்ஹாம்,

மான்செஸ்டர் சிட்டி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணி வெற்றி பெற்றது.

முதல் பாதி

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நாட்டிங்ஹாமில் உள்ள சிட்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே பாரஸ்ட் அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பாரஸ்ட் வீரர் ஜெய்ர் குன்ஹா கோல் அடித்தி ஆரம்பத்திலேயே அணீக்கு முன்னிலையை பெற்று தந்தார்.

தொடர்ந்து 18-வது நிமிடத்தில் லியாம் டிலாப் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் பாரஸ்ட் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

டிலாப்பின் 2-வது கோல்

இரண்டாவது பாதி தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி பதிலடி கொடுத்தது. 52-வது நிமிடத்தில் ரயான் செர்கி அற்புதமாக கோல் அடித்து முன்னிலையை 1-2 என குறைத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், 73-வது நிமிடத்தில் லியாம் டிலாப், மீண்டும் கோல் அடித்தார். இதன் மூலம் பாரஸ்ட் அணி 3-1 என்ற முன்னிலையைப் பெற்றது.

3-வது தொடர் தோல்வி

மீதமிருந்த நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் அடிக்கப் போராடியபோதும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

மறுபுறம், இந்த வெற்றியின் மூலம் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணி 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

X