

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பிரைட்டன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் 0-0 என சமநிலையில் இருந்தது .
தொடர்ந்து இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 51 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .தொடர்ந்து ஆட்டத்தில் 90 வது நிமிடம் முடிந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் மான்செஸ்டர்'அணியின் பர்னோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்
இதனால் 2-0 என மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.